1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை

ஹதீத் சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அது ஷைத்தானின் செயலாகும் எனக் கூறினார்கள்.

عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن النُّشْرَةِ؟ فقال: هي من عمل الشيطان.

ஜாபிர் (ரலி) கூறினார்கள் : சூனியத்தை எடுப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது "அது ஷைத்தானின் செயலாகும்" எனக் கூறினார்கள்.

ஸஹீஹானது-சரியானது இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்

விளக்கவுரை

அறியாமைக் காலத்தில் சூனியத்தை சூனியத்தால் எடுப்பது போன்று சூனியம் செய்யப்பட்டவருக்கு சிகிச்சை செய்வது பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அது ஷைத்தானின் செயலாகும், அல்லது அவனது ஊசலாட்டமாகும் என பதிலளித்தார்கள். ஏனெனில் இது சூனிய வகைகள் மூலமும், ஷைத்தானைப் பயன்படுத்தியும் செய்யப்படும் முறையாகும். எனவே இது தடை செய்யப்பட்ட, இணைவைப்பாகும். இதில் அனுமதிக்கப்பட்ட முறை எதுவெனில் மார்க்க சட்டபூர்வமான மந்திரித்தல் மூலம், அல்லது சூனியம் வைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்து, அல்குர்ஆன் ஓதுவதுடன் அதனைக் கையினால் அவிழ்த்தல் மூலம், அல்லது அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறை மூலம் சூனியத்தை எடுக்கலாம்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பாவத்தில் வீழ்ந்திடாமலிருக்க மார்க்க சட்டங்களில் அறியாதவற்றை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
  2. அறியாமைக் கால முறைப் பிரகாரம் சூனியத்தை எடுப்பது தடுக்கப்பட்டதாகும், ஏனெனில் அதுவும் சூனியமாகவே உள்ளது, சூனியம் இறைநிராகரிப்பாகும்.
  3. ஷைத்தானின் எந்தச் செயலையும் செய்வது ஹராமாகும்.

மொழிபெயர்ப்புகளைக் காண

27 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
BN বাংলা البنغالية
FR Français الفرنسية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
MY မြန်မာ البورمية
DE Deutsch الألمانية
JA 日本語 اليابانية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية