1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீத் யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)

عَن أَبي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَالَ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ».

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யார் رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும். (பொருள் : நான் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் பொருந்திக் கொண்டு விட்டேன்.)

சரியானது இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார் ஸுனன் அபூ தாவூத் - 1529

விளக்கவுரை

இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, யார், 'நான் அல்லாஹ்வை ரப்பாகவும் (அதாவது, கடவுளாகவும், பொறுப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், தலைவனாகவும், சீர்த்திருத்துபவனாகவும்), இஸ்லாமை (அதாவது, ஏவல், விலக்கல்கள் உட்பட, அதன் அனைத்து சட்டங்களையும்) மார்க்கமாகவும் (அதாவது, சட்டமாக உள்ளத்தால் ஏற்றுக் கட்டுப் பட்டு), முஹம்மத் (ஸல்) அவர்களை ரஸூலாகவும் (நபியாகவும், மேலும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பப்பட்ட, அவர்கள் எமக்கு எத்திவைத்த அனைத்தையும்) பொருந்திக் கொண்டு விட்டேன் என்று கூறுகின்றாரோ, அவருக்கு சுவனம் கடமையாகி விட்டது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த தஆவைக் கூறுவதற்கு ஆர்வமூட்டல், மேலும், அதற்குள்ள கூலியைத் தெளிவுபடுத்தல்.
  2. அல்லாஹ்வை ரப்பாகப் பொருந்திக் கொள்வதென்பது, ஓர் அடியான் அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பதைப் பொதிந்துள்ளது.
  3. முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும், தூதராகவும் பொருந்திக் கொள்வதென்பது, அவர்களுக்கு வழிப்படுவதையும், அவர்களது ஸுன்னாவுக்குக் கட்டுப்படுவதையும் உள்ளடக்கிக் கொள்ளும்.
  4. இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக் கொள்வதென்பது, அல்லாஹ் தனது அடியார்களுக்காக தெரிவு செய்துள்ளதைப் பொருந்திக் கொள்வதாகும்.
  5. வேறு சில அறிவிப்புக்களில் வந்துள்ள பிரகாரம், அதானில் ஷஹாதாவுடைய வார்த்தையைக் கேட்கும் போது, இந்த துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
  6. வேறு ஒரு ஹதீஸில் இந்த துஆவைக் காலை, மாலையில் ஓதுவது விரும்பத்தக்கது என்றும் வந்துள்ளது.

மொழிபெயர்ப்புகளைக் காண

40 மொழி
EN English الإنجليزية
ID Indonesia الإندونيسية
BN বাংলা البنغالية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
MY မြန်မာ البورمية
TH ไทย التايلندية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy المالاجاشية
KN ಕನ್ನಡ الكانادا
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية