1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீத் ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்

عَنْ أبي سَعيدٍ الخُدريَّ رضي الله عنه قال: قال رسولُ الله صلَّى الله عليه وسلم ِ:
«إزْرَةُ المُسْلمِ إلى نصفِ السَّاق، وَلَا حَرَجَ -أو لا جُنَاحَ- فيما بينَهُ وبينَ الكعبينِ، وما كان أسفلَ منَ الكعبين فهو في النار، مَن جرَّ إزارَهُ بطرًا لم يَنْظُرِ اللهُ إليه».

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு முஸ்லிமின் கீழ் ஆடை கணுக்காலின் பாதியளவு இருக்கும். அதில் இருந்து இரு கரண்டைக் கால் வரை (செல்வது) குற்றமில்லை. இரு கரண்டைக் காலுக்கும் கீழால் செல்வது நரகத்திற்கே உரியது. யார் பெருமைக்காக தனது கீழ் ஆடையை இழுத்துக்கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.

சரியானது இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது ஸுனன் அபூ தாவூத் - 4093

விளக்கவுரை

மனிதர்களின் உடம்பின் கீழ் அரைப் பகுதியை மறைக்கும் (வேட்டி போன்ற) ஆடைகளுக்கு மூன்று நிலைகள் இருப்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள் முதலாவது : அரைக்கணுக்கால் வரை இருப்பதுவே விரும்பத்தக்கதாகும். இரண்டாவது : வெறுக்கப்படாமல் அனுமதிக்கப்படும் நிலை. அதாவது, பாதத்தையும் கணுக்காலையும் பிரிக்கும் கரண்டைக் கால் வரை இருத்தல். மூன்றாவது : தடுக்கப்பட்ட நிலை; அதாவது, கரண்டைக்காலுக்குக் கீழாக இருத்தல். இவரை நரக நெருப்புத் தீண்டலாம். அகம்பாவம், பெருமை மற்றும் கருவத்துடன் அவ்வாறு செய்திருந்தால், அல்லாஹ் அவரைப் பார்க்கமாட்டான்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இந்த சட்டமும், எச்சரிக்கையும் ஆண்களுக்கு மாத்திரம் உரியதாகும். பெண்கள் இதிலிருந்து விதிவிலக்களிப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் தமது முழு உடம்பையும் மறைக்குமாறு ஏவப்பட்டுள்ளார்கள்.
  2. காற்சட்டை மற்றும் இதர ஆடைகள் போன்ற, ஆண்களின் கீழ் அரைப்பகுதியை மறைக்கும் எதுவும் 'இதார்' (கீழ் ஆடை) என அழைக்கப்படும். எனவே அவை அனைத்தும் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டங்களில் அடங்கும்.

மொழிபெயர்ப்புகளைக் காண

44 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
BN বাংলা البنغالية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
MY မြန်မာ البورمية
TH ไทย التايلندية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
YO Yorùbá اليوروبا
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy المالاجاشية
KN ಕನ್ನಡ الكانادا
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية