1. முகப்பு
  2. பிரிவுகள்
  3. சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

ஹதீத் நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்

عَن هَانِئ مَوْلَى عُثْمَانَ رَضيَ اللهُ عنهُ قَالَ: كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلَا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ».

உஸ்மான் (ரலி) அவர்களது அடிமையாக இருந்த, ஹானிஃ அவர்கள் கூறுகின்றார்கள் : உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்று விட்டால், தமது தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது அழமாட்டீர்கள். ஆனால், இதற்காக அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ளது அதை விடக் கடினமாக இருக்கும்.

நம்பகமானது (ஹஸன்) இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டது ஸுனன் திர்மிதீ - 2308

விளக்கவுரை

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு கப்ருக்கு முன்னால் நின்றுவிட்டால், தமது கண்ணீரினால் தாடி நனையும் வரை அழுவார்கள். அப்போது அவரிடம், சுவனம் மற்றும் நரகம் பற்றிக் கூறப்படும் போது, சுவர்க்கத்திற்கு ஆசைப்பட்டோ, நரகைப் பயந்தோ அழமாட்டீர்கள். ஆனால், மண்ணறையைப் பார்த்து அழுகின்றீர்களே? எனக் கேட்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நிச்சயமாக மண்ணறைதான் மறுமையின் படித்தரங்களில் முதலாவது படித்தரமாகும். அதில் தப்பிவிட்டார் என்றால், அதற்குப் பின்னால் உள்ள படித்தரங்கள் அதை விட இலகுவாக இருக்கும். அதிலிருந்து தப்பா விட்டால், அதற்குப் பின்னால் உள்ள தண்டனைகள் அதை விடக் கடினமாக இருக்கும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. உஸ்மான் (ரலி) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவராக இருந்தும், அவர்களிடம் காணப்பட்ட அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைத் தெளிவுபடுத்தல்.
  2. மண்ணறை மற்றும் மறுமையின் பயங்கரங்களை நினைவுபடுத்திக் கொள்ளும் போது அழுவது மார்க்கம் காட்டிய ஒன்றாகும்.
  3. மண்ணறையின் இன்பம் மற்றும் வேதனையை உறுதிப்படுத்தல்.
  4. மண்ணறையின் வேதனையை விட்டும் எச்சரித்தல்.

மொழிபெயர்ப்புகளைக் காண

44 மொழி
EN English الإنجليزية
UR اردو الأوردية
ES Español الإسبانية
ID Indonesia الإندونيسية
UG ئۇيغۇرچە الأيغورية
BN বাংলা البنغالية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
MY မြန်မာ البورمية
TH ไทย التايلندية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy المالاجاشية
KN ಕನ್ನಡ الكانادا
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية