عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ، فَإِنَّمَا مَثَلُ مُحَقَّرَاتِ الذُّنُوبِ كَقَوْمٍ نَزَلُوا فِي بَطْنِ وَادٍ، فَجَاءَ ذَا بِعُودٍ، وَجَاءَ ذَا بِعُودٍ، حَتَّى أَنْضَجُوا خُبْزَتَهُمْ، وَإِنَّ مُحَقَّرَاتِ الذُّنُوبِ مَتَى يُؤْخَذْ بِهَا صَاحِبُهَا تُهْلِكْهُ».

நபியவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள், அறிவிக்கின்றார்கள் :
அற்பமாகக் கருதப்படும் பாவங்களை நான் எச்சரிக்கின்றேன். அற்பமாகக் கருதப்படும் பாவங்களுக்கான உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். இவர் ஒரு குச்சியைக் கொண்டவந்தார். மற்றையவர் இன்னுமொரு குச்சியைக் கொண்டுவந்தார். இவ்வாறே அவர்கள் தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.

சரியானது இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார் முஸ்னத் அஹ்மத் - 22808

விளக்கவுரை

இங்கு நபியவர்கள், சிறிய பாவங்களில் கவனயீனமாக ஈடுபடுவதையும், அவற்றை அதிகமாகச் செய்வதையும் எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவை ஒன்றிணைந்து அவனை அழித்து விடுகின்றன. அதற்கு உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் ஒரு குச்சியைக் கொண்டு வந்தனர். இவ்வாறே அவர்கள், தாம் சேர்த்த குச்சிகளைக் கொண்டு தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவர் தௌபா செய்யாத நிலையிலும், அவரை அல்லாஹ் மன்னிக்காத நிலையிலும், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இலகுவாகப் புரியவைக்கவும், தெளிவை அதிகப்படுத்தவும் உதாரணங்கள் கூறுவது நபி (ஸல்) அவர்களது வழிமுறையாகும்.
  2. அற்பமாகக் கருதப்படும் சிறிய பாவங்களை எச்சரித்தல். அதை நீக்கிக் கொள்வதை துரிதப்படுத்த ஆர்வமூட்டல்.
  3. அற்பமாகக் கருதப்படும் பாவங்கள் என்பது, பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது : ஓர் அடியான், சிறுபாவங்கள் என நினைத்துக்கொண்டு செய்யும் பெரும்பாவங்கள். இரண்டாவது : ஓர் அடியான் பொருட்படுத்தாமலும், தவ்பாச் செய்யாமலும் செய்யும் சிறிய பாவங்கள். இந்த சிறிய பாவங்கள் அவனிடம் ஒன்றிணைந்து, அவனை அழித்தே விடுகின்றன. மூன்றாவது : ஓர் அடியான் பொருட்படுத்தாமல் செய்யும் சிறு பாவங்கள். அவை அழிவையேற்படுத்தும் பெரும்பாவங்களில் வீழந்துவிட காரணமாக அமைந்து விடுகின்றன.

மொழிபெயர்ப்புகளைக் காண

41 மொழி
EN English الإنجليزية
ID Indonesia الإندونيسية
BN বাংলা البنغالية
TR Türkçe التركية
RU Русский الروسية
BS Bosanski البوسنية
SI සිංහල السنهالية
HI हिन्दी الهندية
ZH 中文 الصينية
FA فارسی الفارسية
VI Tiếng Việt الفيتنامية
TL Tagalog تجالوج
KU Kurdî الكردية
HA Hausa الهوسا
PT Português البرتغالية
ML മലയാളം المليالم
TE తెలుగు التلغو
SW Kiswahili السواحيلية
MY မြန်မာ البورمية
TH ไทย التايلندية
PS پښتو بشتو
AS অসমীয়া الأسامية
SQ Shqip الألبانية
SV Svenska السويدية
AM አማርኛ الأمهرية
NL Nederlands الهولندية
GU ગુજરાતી الغوجاراتية
PRS دری الدرية
SR Српски الصربية
RO Română الرومانية
HU Magyar المجرية
MOS Moore الموري
MG Malagasy المالاجاشية
KN ಕನ್ನಡ الكانادا
WO Wolof الولوف
UK Українська الأوكرانية
KA ქართული الجورجية
MK Македонски المقدونية
KM ភាសាខ្មែរ الخميرية
PA ਪੰਜਾਬੀ البنجابية
MR मराठी الماراثية